ஒமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு -பிரான்ஸ் விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
new variant
omicron virus
french scientists
By Sumithiran
பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளில் ஒமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு வகையான பி.ஏ.2 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அது வேகமாக பரவும் தன்மை கொண்டது என பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஒமிக்ரோன் வகை கொரோனா வைரசின் துணை திரிபுகள், பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 என உலக சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் 426 பேருக்கு பி.ஏ.2 வகை ஒமிக்ரோன் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், டென்மார்க், நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அவ்வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாறுபட்ட ஒமிக்ரோன் குறித்து ஆய்வுகள் நடைபெறும் நிலையில், இது நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்றும் இதன் மூலம் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி