பெறுமதி சேர் வரியினால் தொலைபேசிகளின் விலையிலும் அதிகரிப்பு!
புதிய பெறுமதி சேர் வரி (VAT) 18% வீதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், அனைத்து கையடக்கத் தொலைபேசிகள், துணைப் பொருட்கள் மற்றும் நிலையான பொருட்களின் சில்லறை விலைகள் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கதின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"அதிகரிக்கப்படவுள்ள விலைகளை எங்களால் தீர்மானிக்க முடியாது, மேலும் இந்த விலை உயர்வு சிறிய அளவிலான தொலைபேசி விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை நேரடியாகப் பாதிக்கும்.
தொலைபேசிகள் மற்றும் பாகங்கள்
விலையுயர்வு காரணமாக நுகர்வோர் தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் எதையும் வாங்க முடியாத நிலை உருவாகும்.
எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு VAT விதிக்கப்படக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
தவிரவும், அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையும் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.