இலங்கையில் வாகன விலைகளில் ஏற்பட்ட மாற்றம்
Sri Lanka Economic Crisis
Electric Vehicle
By Vanan
வாகனங்களின் விலை தற்போது ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கை வாகன சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளதாக இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களின் விலை

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை தற்போது ஸ்திர நிலையை அடைந்துள்ளது.
பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியமையினால் வாகனங்களின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது.
எனினும், தற்போது கேள்வி அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை ஸ்திரநிலையை அடைந்துள்ளது” - என்றார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி