இலங்கையில் பரவும் புதிய வைரஸ்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இலங்கையில் மற்றுமொரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஏராளமான சிறுவர்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு தினமும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் - முதியவர்கள் - கர்ப்பிணித் தாய்மார்கள்
இந்த புதிய வைரஸ் காய்ச்சலின் பரவல் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், எதாவது காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கியமாக இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
