புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கதிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
Sri Lankan Peoples
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Dilakshan
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்கு சிறப்பு வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இதற்கான வாய்ப்பை வழங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், கைதிகளின் உறவினர்கள் ஒவ்வொரு கைதிக்கும் போதுமான உணவுப் பொட்டலம், இனிப்புப் பொட்டலம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொட்டலத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
பரிசோதனை
இந்த பார்வையாளர்களுக்கான பரிசோதனை, அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி