இஸ்ரேல் பிரதமர் கைது செய்யப்படுவார் : அமெரிக்காவிலிருந்து வெளியான எச்சரிக்கை
Benjamin Netanyahu
Israel
New York
Arrest
By Sumithiran
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்குச் சென்றால் கைது செய்யப்படுவார் என்று நியூயோர்க் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட சோஹ்ரான் மம்தானி எச்சரித்துள்ளார்.
நியூயோர்க் மேயரின் எச்சரிக்கை இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், நியூயோர்க் நகரத்திற்குச் செல்லத் தயாராகி வருவதாக தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு எந்தத் தடையும் இல்லை
இந்த விஜயத்தின் போது மம்தானியுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறீர்களா என்று செய்தித்தாள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர்,

மம்தானி அவரைக் கைது செய்வது குறித்து தனது எண்ணத்தை மாற்றி, இஸ்ரேலுக்கும் தங்க உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஒதியமலைப் படுகொலை அன்றோடு முடிந்துவிடவில்லை! 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி