சஜித் பிரேமதாசவைச் சந்தித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்
தற்போதைய அரசாங்கம் மக்களை ஒடுக்கி அதிக வரி விதித்து, மக்களை இன்னலுக்குள்ளாக்கி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (04) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு பேசினார்.
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகரான அப்பிள்டன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் நிலை
இதில் இரு தரப்பினருக்கும் இடையில் இலங்கையின் தற்போதைய சமூக,பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கம் மக்களை ஒடுக்கி அதிக வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் விளக்கமளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வரி விதிக்காமல் அரச வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமை
அரசாங்கம் வேண்டுமென்றே மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது விளக்கமளித்தார்.
மேலும், நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கடந்த காலங்களில் இலங்கையில் ஆற்றிய சேவைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இந்த வேளையிலே நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நியூசிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ டிராவலர்(Andrew Traveller) அவர்களும்,ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள மேர்வின் சில்வா : புது யுகத்துக்குள் இலங்கை காலெடுத்து வைக்கும் எனவும் உறுதி!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |