கடையில் திருடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடையில் திருடிய நிலையில் தான் அந்த தவறை செய்ததாக நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.
நியூஸிலாந்தின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான கோல்ரிஸ் கஹ்ரமான் (43) என்பவரே இவ்வாறு திருட்டில் ஈடுபட்டவராவார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவேளை
இவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவேளை, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
சட்டத்தரணியான எம்.பி
ஈரானில் பிறந்த கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குடும்பத்தினருக்கு நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் கிடைத்தபோது நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தார் சட்டத்தரணியான அவர் 2017ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
அதேவேளை நியூஸிலாந்துக்கு அகதியாக வந்த பின்னர் அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதல் நபர் கோல்ரிஸ் கஹ்ரமான் என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |