சிறிலங்காவின் புதிய அதிபர் ரணில் என்பதில் 1000 வீதம் உறுதி! நம்பிக்கை வெளியிட்டார் வஜிர
முன்னர் கணித்தது போல ரணில் விக்ரமசிங்க 140 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என்பதில் 1000% உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இலங்கை அராஜகத்தை நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்காக கலந்துரையாடியுள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் மூலம் புதிய அதிபர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வஜிர அபேவர்தன முன்னர் வெளியிட்ட அறிவிப்பு
இதேவேளை, நிரந்தர அதிபர் பதவிக்கான நாடாளுமன வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 140 வாக்குகளைப் பெறுவார் என வஜிர அபேவர்தன நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, நிரந்தர அதிபராகிறார் ரணில் - ஐ.தே.க அசையாத நம்பிக்கை
