பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! இறுதிக்கட்ட பரபரப்பு

Boris Johnson United Kingdom Liz Truss Rishi Sunak
By Vanan Sep 04, 2022 10:15 AM GMT
Report

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பு நாளை திங்கட்கிழமை (5) இலங்கை, இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு வரவுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், வெற்றி பெறப்போவது யார் என்ற இறுதிக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்பின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால், கட்சிக்குள் நம்பிக்கையைப் பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் நபர், நாடு சந்தித்துவரும் அனைத்து சவால்களையும் எதிா்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பாரா என்பதற்கு காலமே பதிலுரைக்கும் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த பிரதமர் யார்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! இறுதிக்கட்ட பரபரப்பு | Next Prime Minister Of Uk Liz Truss Rishi Sunak

கொவிட் தொற்று தீவிரடைந்த காலத்தில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி, பிரதமராக இருந்த பொறிஸ் ஜோன்சன், கேளிக்கை விருந்து நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அது நாட்டில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பலைகள் எழுந்தன.

அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பொறிஸ் ஜோன்சன் மீது அதிருப்தி தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பலர் இராஜினாமா செய்தனர். உட்கட்சியிலேயே கடும் அதிருப்தி எழுந்ததால், பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் பொறிஸ் ஜோன்சன்.

அதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரே நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்பார்.

பிரதமர் போட்டி 

பிரதமர் போட்டிக்குள் பலர் நுழைந்த நிலையில், இறுதிச்சுற்றில் ரிஷி சுனக்குக்கும் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் நுழைந்ததில் இருந்தே, அவருக்கு ஆதரவு அலை வீசியது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் ஆரம்பகட்ட வாக்கெடுப்புகளில் அவர் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தார். அந்தச் சுற்றுகள் நிறைவடைந்து கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறை தொடங்கியது.

சுமாா் 1.60 லட்சம் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கான அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை அளிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், இருவரில் கட்சித் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் பதவியேற்கப் போகிறவர் யார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

திடீரென பெருகிய லிஸ் ட்ரஸுக்கான ஆதரவு

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! இறுதிக்கட்ட பரபரப்பு | Next Prime Minister Of Uk Liz Truss Rishi Sunak

தேர்தலுக்கான பிரசாரமும் அனல்பறந்த நிலையில், அந்த நிலைமை படிப்படியாக மாறியது. அவரை எதிா்த்துக் களம் கண்ட லிஸ் ட்ரஸுக்கான ஆதரவு பின் பெருகியது.

தற்போதைய சூழலில் அவரே கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் தோ்ந்தெடுக்கப்படுவார் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

லிஸ் ட்ரஸின் முன்னிலைக்கு பொறிஸ் ஜோன்சனின் ஆதரவாளா்கள் முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறாா்கள். ஏனெனில், முதன் முதலில் இராஜினாமா செய்து பொறிஸ் ஜோன்சனின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் ரிஷி சுனக் தான்.

பிரதமா் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கைத் தவிர யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என கட்சி உறுப்பினர்களிடம் பொறிஸ் ஜோன்சனும் கோரியிருந்தார்.

அவரது கடும் எதிர்ப்பு, ரிஷி சுனக்குக்கான ஆதரவைப் பெருமளவில் குறைத்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026