கிம்புலா எலே குணாவால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிதி! விடுதலைப்புலிகள் விசாரணையில் அதிர்ச்சி
தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியைச் சுற்றியுள்ள சதித்திட்டம் குறித்த விசாரணையில், இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA), அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எல குணா எனப்படும் சி. குணசேகரன் கராச்சியைச் சேர்ந்த பிரபல ஆயுதக் கடத்தல்காரர் ஹாஜி சலீமின் சகாக்களுக்கு சட்டவிரோத போதைப்பொருள் நிதியை மாற்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் அமைதியை சீர்குழைக்க ஒரு பெரிய சதி இருந்ததை நிரூபிக்க, எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல், ஹவாலா வலையமைப்பு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு நடவடிக்கைகளுடன் குணாவை இணைக்கும் கிரிப்டோ பரிவர்த்தனைகள், தொலைபேசி தரவு மற்றும் நிதி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
மறுமலர்ச்சி சதி வழக்கு
விடுதலைப்புலிகள் அமைப்பின் மறுமலர்ச்சி சதி வழக்கு தொடர்பாக 2022 டிசம்பரில் தமிழ்நாட்டில் ஒன்பது இலங்கையர்களுடன் கைது செய்யப்பட்ட குணா தாக்கல் செய்த விடுதலை மனுவை எதிர்த்து, ஒக்டோபர் 17 அன்று நீதிமன்றத்தில் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மார்ச் 15, 2022 அன்று, இலங்கையைச் சேர்ந்த பாரிய போதைப்பொருள் அமைப்பை கொண்ட குணா மற்றும் புஷ்பராஜா என்கிற பூகுடு கண்ணா, திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு தடுப்பு முகாமில் ஏனைய குற்றவாளிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக அண்டை நாட்டின் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரரான ஹாஜி சலீமின் தொடர்புடன் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வர்த்தகம் மூலம் பெரும் நிதி மற்றும் ஆயுதங்களைத் திரட்டுவது" என்ற பொதுவான குற்ற நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டனர் என்றும் அறிக்கை விவரித்துள்ளது.
இதன்படி குறித்த விடயங்களை பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தில் NIA - வின் சமர்ப்பிப்புக்களை விளக்கப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் விளக்கியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |