வயோதிபப் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள்!
திருகோணமலையில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
நிலாவெளி காவல் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டைப் பகுதியில் கடையில் இருந்த பெண் ஒருவரின் சங்கிலியே இவ்வாறு பறிகொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (06-06-2026) மதியம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் குறித்த கடையைத் தாண்டிச் சென்று பின்னர் மீண்டும் அக்கடைக்கு முன் நிறுத்தி ஒருவர் கடையில் பொருள் வாங்குவது போலப் பாசாங்கு செய்துள்ளனர்.
இதையடுத்து கடையில் இருந்த 69 வயதான வயோதிபப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நகர் பகுதியை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக நிலாவெளி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை நிலாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சஹ்ரானின் வலதுகரம் அரச சாட்சியானார்! நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்றில் வெடித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பகீர் ரகசியங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |