உல்லாசப்பயணம் வந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்(படங்கள்)
திருகோணமலை நிலாவெளி கடற்பரப்பின் கோபாலபுரம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இருவரையும் மீட்டுள்ளதுடன், காணாமல் போன மற்றுமொரு இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் வருடாந்த உல்லாசப் பயணத்திற்காக வந்திருந்த நிலையில், தடை செய்யப்பட்ட பகுதிக்கு அப்பால் குளிப்பதற்குச் சென்றமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தலத்துஓயா, தம்பகஹவெல, பட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த நளின் பிரியந்த (வயது 21) என்பவரே காணாமல் போயுள்ளார்.


