கோட்டாபயவுக்கு விசேட கடிதத்தை தயார் செய்யும் இராஜாங்க அமைச்சர்
letter
gotabaya
nimal lansa
By Sumithiran
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசேட கடிதமொன்றை தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த கடிதத்தில் அமைச்சர் பதவியை வகித்து தாம் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பில் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு என்ன செய்யப்போகின்றார் என்பது தெரியவில்லை.
அண்மையில், லான்சா, தனது ஊழியர்களுடன் சேர்ந்து, தனது அமைச்சக அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட உடமைகளை அகற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அலுவலகத்திற்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்