இலங்கையில் அடைக்கலம் கோரி நித்தியானந்தா கடிதம் - சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவின் பதில் அறிவிப்பு!
இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள நித்தியானந்தா சுவாமி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அடைக்கலம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில், நித்தியானந்தா சுவாமி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ள தாயாரான நித்தியானந்தா

நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், இலங்கையில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவே செய்தி வெளியாகியிருந்தது.
மேலும் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் சொர்க்கப்பூமியான கைலாசா ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையிலேயே இந்த செய்தியில் உண்மையில்லை என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பதில் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.