எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
நேற்றைய தினம் (01.08.2025) எரிபொருள் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாது என்ற பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையில் திருத்தங்களின் படி தற்போது, லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 289 ரூபாவாக பதிவாகியுள்ளது.
போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கு திணறி வரும் நிலையில், எரிபொருட்களின் விலைகள் மாற்றம் இன்றி காணப்பட்டால் மேலும் விலை அதிகரிப்புகளுக்கான சாத்தியம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் சில்லறை விலைகளில் மாதாந்திர திருத்தம் செய்யப்படுவதற்கு இணங்க இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலைகள்
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையில் திருத்தங்களின் படி தற்போது, லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 289 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 185 ரூபாவாக பதிவாகியுள்ளது.
92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 305 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
