முடிவில் மாற்றமில்லை - திட்டவட்டமாக அறிவித்தார் அதிபர் பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, படைகளை திரும்ப பெறுவதற்கான உங்களது தற்போதைய திட்டத்தில் மாற்றம் உள்ளதா? என ஜோ பைடனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் இல்லை, திட்டத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என பதிலளித்தார். இதுகுறித்து அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து நாம் வருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்துள்ளோம் எனக் கூறினார்.
ஆனாலும் விமானம், உணவு, உபகரணங்கள், ஆப்கான் படைக்கான ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும் என அவர் கூறியுள்ளார்.