நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல
நாமல் ராஜபக்சவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்தச் சம்பவம் தொடர்பாகவோ காவல்துறையில் முறைப்பாடு செய்ய தாம் ஒருபோதும் சென்றதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஹோமாகம காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார்
"எந்தவொரு கிரிமினல் குற்றம் குறித்தும், குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் செய்வேன். இதுவரை, நான் எந்த காவல்துறையிலும் புகார் செய்யவில்லை,'' என்றார்.
அப்படியானால், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் தொடர்பான உண்மை நிலவரத்தை கேட்டபோது, அப்படி புகார் செய்யப்படாத நிலையில், பத்திரிகைகளில் இதுபோன்ற தகவல்கள் வெளியானால், என்ன செய்வேன் என, கேள்வி எழுப்பிய அமைச்சர், பதிலளித்தார்.
நாமல் ராஜபக்சவுடன் முரண்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் முரண்பாடு உள்ளதா என வினவியபோது,
“பொது முன்னணி அரசியல் குழு கூட்டத்திலும் நாங்கள் நட்பு ரீதியாக உரையாடினோம். அங்கு ஜனாதிபதி வேட்புமனு குறித்தும் எமது கருத்தை தெரிவித்தோம்.
கட்சியின் கருத்திலிருந்து விலகிச் செல்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு நாங்கள் ஆதரவாகவும் இருந்தோம். ஆரோக்கியமான ஜனநாயகம் அப்படித்தான்'' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |