எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
SJB
Sri Lankan Peoples
Kumara Jayakody
NPP Government
By Dhilak
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
கட்சியின் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
காரணம்
லஞ்ச ஒழிப்பு ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாலும், நிலக்கரி கொள்முதல் செயல்முறையை அவர் முறையாக நிர்வகிக்கத் தவறியதாலும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதற்காக மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 16 மணி நேரம் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்