சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (05) கூடவுள்ள எதிர்க்கட்சிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள திகதியும் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சியிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடி வருவதுடன் பிரேரணையை வரைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கையிருப்புப் பட்டியலில் இருந்த சில பொருட்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற ஊழியர்கள் சிலருக்கு அவர் முறையற்ற அழுத்தம் கொடுத்ததாக அஜித் பி. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |