சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் :ஆளும் கட்சிக்குள் பிளவு..! எதிரணி எம்.பி தெரிவிப்பு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு பிளவுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மாரிக்கர் தெரிவித்தார்.
இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் சபாநாயகருக்கு ஆதரவளிக்க திட்டவட்டமாக மறுத்து வருவதாகக் கூறினார்.
எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம்
உள்ளக கருத்து வேறுபாட்டை மூடிமறைப்பதற்காக, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்தைத் தவிர்க்க அல்லது ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சபாநாயகரை ஆதரிக்க மறுக்கிறது. அதனால்தான் அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தைத் தவிர்க்க முயற்சிப்பதோடு, அதன் உள்ளடக்கத்தைத் தளர்த்துமாறும் எங்களைக் கேட்டுக்கொள்கிறது.
ஆனால், எதிர்க்கட்சியானது தீர்மானத்தில் எந்தவொரு அம்சத்தையும் மாற்றவோ அல்லது அதைத் தளர்த்தவோ சற்றும் தயாராக இல்லை," மரிக்கார் மேலும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |