தேர்தல் காலங்களில் முரண்பாட்டை தவிர்ப்பது முக்கியமானது : முன்னாள் சபாநாயகர் வலியுறுத்தல்
இலங்கையின் தேர்தல் காலங்களில் மூன்று துறைகளுக்கிடையில் மோதல்களைத் தவிர்ப்பது முக்கியமானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நாடாளுமன்றத்துக்கிடையில் முரண்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை மா அதிபர் (IGP) தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) இன்று (26) காலை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
மூன்று துறைகள்
இதேவேளை தேர்தல் தொடர்பிலும், காவல்துறை மா அதிபர் விவகாரம் தொடர்பில் பல தரப்பினராலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தனது எக்ஸ் (X) பக்கத்தில் செய்துள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தேர்தல் காலங்களில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, நாடாளுமன்றத்துக்கிடையில் மோதல்களைத் தவிர்ப்பது முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சுயநலத்தை விட நாட்டின் எதிர்காலம் முக்கியமானது எனவும் கருஜயசூரிய வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
It's crucial for the judiciary, executive, and legislature to avoid conflicts, especially during election times. The nation's future must come before self-interest.
— Karu Jayasuriya (@KaruOnline) July 26, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |