அமெரிக்காவுடனான போர் : சீனாவிலிருந்து ஈரான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்காவுடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானின் போரில், முதன்மையானவராகக் கருதப்படும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு முறைப் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார்.
மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை
இந்த நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை இன்று ( 16) நேரில் சந்தித்த அராக்சி வளைகுடா போர் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார்.

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஓமான் உடன் ஒப்பந்தம்
அத்துடன், இந்தச் சந்திப்பில் அமெரிக்கா உடனான மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை எனவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஓமான் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அராக்சி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இருதரப்பும் இணைந்து மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என சீன அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |