அமெரிக்காவுடன் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை..! ஜனாதிபதியின் முக்கிய தகவல்
பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் அதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி வீதத்தை 20 வீதமாகக் குறைக்க அமெரிக்காவால் முடிந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதை மேலும் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதி ஒப்பந்தம்
அத்தோடு, இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்கள் மூலம் சில ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாகவே வரி வீதம் 20% வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றம் மற்றும் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், இறுதி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
