ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்கு உணவு, பானங்கள் அல்லது சிற்றுண்டிகளை வழங்கி விருந்துகளை நடத்துவது ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி குற்றச் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அவர்கள் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் அதிகாரி ஒருவர் நேற்று (26) தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில், அரசியல் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கள் ஆதரவாளர்களுக்காக அடிக்கடி விருந்துகளை நடத்துவது வழக்கமாக இருந்தது, எனினும் அப்போது இந்த நடைமுறை பரவலாக விவாதிக்கப்படாமல் அல்லது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக கருதப்படாமல் இருந்தது.
ஜனாதிபதி வேட்பாளர்
எனினும், அனுராதபுரத்தில் (Anuradhapura) ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் அப்பகுதியிலுள்ள கல்வியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்காக நடத்தப்படவிருந்த விருந்தொன்றை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதையடுத்து புதிய விவாதம் ஒன்று எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சிந்தக குலரத்ன (Chintaka Kularatne) ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகள் தூண்டுதலாக அமையும் எனவும், எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இது போன்ற விடயங்களை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல்கள் சட்டத்தின் 77வது பிரிவின்படி விருந்துபசரிப்புகள் அளிப்பது குற்றமாகும். வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களுக்கு உணவு, பானம், குளிர்பானங்கள் அல்லது பரிசுகளை வழங்கக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
பிரசார நடவடிக்கைகள்
மேலும், “ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் முன்னெடுக்கும் பிரசார நடவடிக்கைகள் மரதன் ஓட்டப் போட்டிகள் போல் மாறிவிட்டது, அவர்கள் இப்போது வீடு வீடாக செல்வது, கூட்டங்கள், விவாதங்கள், ஊடக நேர்காணல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் போன்ற மக்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.
ஆனால் செப்டெம்பர் 21 ஆம் திததி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிப்பவர்கள் வாக்காளர்கள் ஆகிய பொது மக்களே” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |