இன்று இரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்குமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்
srilanka
price
fuel
increase
gammanpila
By Sumithiran
இன்று இரவு எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற வதந்தியில் உண்மையில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று இரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று வங்கிகிளின் செயற்பாட்டில் முடக்கம் ஏற்படவுள்ளதாகவும் எனவே அதனை தவிர்க்க எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்