ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை..! அளிக்கப்பட்ட பதிலால் அதிர்ச்சி
வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு, காரையோர பாதுகாப்பு திணைக்களங்கள் ஆகியவற்றால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வழங்கியுள்ளது.
காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ. முரளிதரனால் வடமராட்சி கிழக்குபிரதேச செயலகத்திடம் கோரிய தகவலிற்கு அவர்கள் வழங்கிய பதிலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
காணிகள் தொடர்பான விபரம்
பல ஏக்கர் தனியார் காணிகள் உட்பட அரச காணிகளும் வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சட்ட முரணாக கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அவற்றை விடுவிக்குமாறு மக்களால் பல தடவைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் உட்பட பல கூட்டங்களில் கோரிக்கை விடுக்க பட்டிருந்தது.

இந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் இல்லை என குறிப்பிடப்படுவது வியப்பாகவுள்ளதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |