வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்கான கால வரையறை: வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples TIN Number
By Kajinthan Jun 25, 2026 11:36 PM GMT
Report

வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாகக் காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் (25.06.2026) அவ்அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

மேற்படி கலந்துரையாடியதற்கு அமைவாகப் பின்வரும் விபரங்களைப் பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் தெரியப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்...! வெடித்த சர்ச்சை

பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்...! வெடித்த சர்ச்சை

இறைவரித் திணைக்களம்

இதனடிப்படையில், “வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்கான கால வரையறை: வெளியான அறிவிப்பு | No June 30 Deadline For Tin Registration

அவ்வாறு கட்டணம் செலுத்துவதோ அல்லது பெற்றுக்கொள்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஏற்கனவே வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் உரியவர் தனது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்து வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.

யாழில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று பறிமுதல்!

யாழில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று பறிமுதல்!

அடையாள இலக்கம்

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ (அதாவது www.ird.gov.lk) அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்கான கால வரையறை: வெளியான அறிவிப்பு | No June 30 Deadline For Tin Registration

மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிய முடியும்.

எனவே மேற்படி விபரங்களுக்கு அமையப் பொதுமக்கள் எதுவித பீதியும் அடையத் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா பேரழிவு...! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெனிசுலா பேரழிவு...! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024