அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவருவதில் எந்த சட்டத்தடையும் இல்லை! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கியுள்ள வாக்குமூலம் காரணமாகவே அவரை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் பின்வாங்கி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருடர்களை கைதுசெய்வதாக தெரிவித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் திங்கட்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க, “திருடர்களை கைதுசெய்யும் அரசாங்கத்தின் வேவைத்திட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசியல் நாடகத்துக்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.திருடர்களை கைதுசெய்வதுபோல், நாட்டை வங்குரோத்தாகியவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாடு விடுதலை புலிகளின் யுத்தத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது ஆனால் 87,88 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து விடுதலை புலிகளின் 30 வருட யுத்தம் காரணமாக எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |