களுத்துறை துப்பாக்கிச் சூடு! பானந்துர நிலந்தவின் மைத்துனர் படுகொலை
புதிய இணைப்பு
பாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபர் தற்போது தடுப்பு காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பிரபல பாதாள உலக குற்றவாளி பானந்துர நிலந்தவின் மைத்துனரான டிலா என்பர் என தெரியவந்தள்ளது.
அத்தோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டை குடு சலிந்து என்ற பிரபல பாதாள உலக தலைவனின் குழுவினரே நடத்தியுள்ளதாகவும் இதன்போது “3எய்ட்“ ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
களுத்துறை மாவட்டம் - பாயாகலவின் நைமுல்ல பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சற்று நேரத்திற்கு முன்பு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |