மின்வெட்டுத் தொடர்பில் தற்போது வெளியானது புதிய அறிவிப்பு - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கையில் மின்சார கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி கூரை அமைப்புகளை வழங்கவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு இல்லை
இவ்வாறான நிலையில், இன்று முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் அறிவிப்பு விடுத்துள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் மின்சார கட்டணம் அதிகரிப்பட்டுள்ளமையாலேயே தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு அதிபர் பணிப்புரைவிடுத்திருந்தார்.
மின்சக்தி அமைச்சு அறிவிப்பு
ஆகவே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது என சிறிலங்கா மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில், நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
