ராஜபக்சாக்களை எவரும் அழிக்க முடியாது என சூளுரை
ராஜபக்சாக்களை எவரும் அழிக்கமுடியாதென வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18) 'கிரி அம்மாவரு' அன்னதானம் ஒன்று வழங்கப்பட்டது.
வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாரும் தோற்கவில்லை
“நாட்டைக் காப்பாற்றிய தலைவனுக்குக் கடமையாகத்தான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன். இன்று இந்த நிகழ்வுக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தேன். சில முகங்களையே இங்கே காணக்கிடைக்கிறது. நாம் யாரும் தோற்கவில்லை. நீங்களும் தோற்றுப்போகவில்லை.

தந்தையின் வழியில் முன்செல்லவேண்டும்
நாமல் ராஜபக்ச இங்கு வந்துள்ளார். ஒரு மூலையில் இருக்கிறார். அப்படி இருக்க முடியாது. முன்னால் வந்து தந்தை சென்ற பாதையில் முன்செல்ல வேண்டும்.

ராஜபக்ஷமாரை யாராலும் அழிக்க முடியாது. என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 12 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்