முறையான திட்டங்கள் இல்லை - இலங்கை அரசின் நிலைப்பாடு வெளியானது
விஞ்ஞான முறையில் வைரஸை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் பிசிஆர் பரிசோதனைகளை கூட அரசாங்கம் குறைத்துள்ளதாக சமன் ரத்னபிரிய குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஒரு வாரத்திற்குள் 1386 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகி உள்ளதுடன், 30,625 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி 22,290 பிசிஆர் பரிசோதனைகளே செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28,500 வரை செய்து வந்த பிசிஆர் பரிசோதனை தற்போது 22,500 வரை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 850 வரை அதிகரித்துள்ளதாக சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கமும் சுகாதார தரப்பினரும் நோயாளர்களை தேடுவதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் சமன் ரத்னபிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.