அடுத்த இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகுமா? வெளியானது அறிவிப்பு
power cut
Gamini Lokuge
Kelanitissa power plant
By Sumithiran
மின் பாவனையை கட்டுப்படுத்தும் யோசனையை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
வீதி விளக்குகளை அணைக்கவும் அலுவலக உபகரணங்களை அணைக்கவும் முன்மொழியப்படும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் செயற்படுத்தப்படாவிட்டால் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
