இலங்கையில் இராவணனும் இல்லை சிவ வழிபாடும் இல்லை! புதிய சர்ச்சையை உருவாக்கினார் சரத் வீரசேகர

Sri Lankan Tamils Tamils Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kiruththikan Sep 23, 2022 04:43 AM GMT
Report

இராவணன்

இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை, சிவ வழிபாடும் இல்லை என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர பேசியுள்ளமை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

திருக்கோணேச்சர ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்று பின்னணி காணப்படுகிறது எனவும் திருகோணலை மாவட்டத்தில் நான்கு தூபிகள் இருந்துள்ளன, அவை கடலை நோக்கியதாக அமைந்திருந்ததால் திருக்கோணேச்சரம் என பெயர் பெற்றுள்ளது என்றும் மகா வம்சத்திலும் இவ்விடயம் குறிப்பிடப்படுகிறது, எமக்கும் வரலாறு தெரியும் நாமும் வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இராவணன் - தமிழரா ? சிவ வழிபாட்டில் ஈடுபட்டாரா ?

இலங்கையில் இராவணனும் இல்லை சிவ வழிபாடும் இல்லை! புதிய சர்ச்சையை உருவாக்கினார் சரத் வீரசேகர | No Ravana In Sri Lanka Tamils

இராவணன் திருக்கோணேச்சர ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் இராவணன் என்ற மன்னன் இருந்தாரா ? அவர் தமிழரா ? சிவ வழிபாட்டில் ஈடுபட்டாரா ? என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகின்றது.

இதில் 18 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே கோவிலுக்கு சொந்தமானது. ஆலயத்துக்கு செல்லும் பாதையில் சுமார் 60 கடைகள் உள்ளன.

கூட்டமைப்பினர்  எதிர்ப்பு

இலங்கையில் இராவணனும் இல்லை சிவ வழிபாடும் இல்லை! புதிய சர்ச்சையை உருவாக்கினார் சரத் வீரசேகர | No Ravana In Sri Lanka Tamils

இந்த கடைகளை சிங்களவர் வைத்திருப்பதால் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக இனவாதம் தெரிவிக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினர்.

திருக்கோணேச்சர ஆலயத்தின் வீதி இருமருங்கிலும் உள்ள கடைகளை புதுப்பிக்க ஆலயத்தின் நிர்வாக சபையினர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள், 

கடைகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதற்கு ஆலய பரிபாலன சபையே விரும்பும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்துக்கே எனவும் கூறியுள்ளார். 

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026