எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது - பசில் ராஜபக்ச
Srilanka
festive season
Basil Rajapaksa
shortage
essentials
By MKkamshan
எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தொடர்பாக இன்று (11) பிற்பகல் அரசதலைவரால் நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பால் மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக பசில் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.
அரசு வழங்கும் எந்த வித வரிச்சலுகையும் நுகர்வோருக்கு கிடைப்பதில்லை என்பதும், அரசு நிவாரணத்தின் கீழ் பெறப்படும் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதும் இதன்போது தெரியவந்துள்ளது.
