10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை

Sri Lanka Nepal Flood Landslide
By Thulsi Aug 27, 2026 05:25 AM GMT
Report

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாகப் போட்கோஷி ஆற்றில் உருவான 8 முதல் 10 மீற்றர் உயரமான பெரும் வெள்ள அலைகள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி

நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி

உலகம் முழுவதும் அதிர்ச்சி

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை | No Sri Lankans Reported Affected By Nepal Floods  

தற்போது வரை நேபாளைத்தைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 698 பேர் மாயமாகியிருப்பதாகவும் நேபாள அரசு அதிகாரப்பூர்வ தகவலைத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும், அமெரிக்கர்கள் 54 பேர் மாயமாகியிருப்பதாகவும், 34 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியிருப்பதாகவும், 33 பிரிட்டன் நாட்டவர்கள் மாயமாகியிருப்பதாகவும் நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் காரில் சென்ற குடும்பத்தை மோதிய தொடருந்து - 17 வயது சிறுமி பலி - இரு சிறுவர்கள் படுகாயம்

கிளிநொச்சியில் காரில் சென்ற குடும்பத்தை மோதிய தொடருந்து - 17 வயது சிறுமி பலி - இரு சிறுவர்கள் படுகாயம்

எவரும் பாதிக்கப்படவில்லை

நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை | No Sri Lankans Reported Affected By Nepal Floods  

எனினும் இப்பேரழிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் வசிக்கும் 85 முதல் 100 வரையிலான இலங்கையர்களின் நிலைமையைக் காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர Hot line +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பேரழிவுகரமான வெள்ளம்! கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்

நேபாளத்தில் பேரழிவுகரமான வெள்ளம்! கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026