ரஷ்யாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு : இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலா...
ரஷ்யாவின் (Russia) கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
13 அடி உயர சுனாமி அலைகள்
சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன
அத்துடன் ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வை தொடர்ந்து, ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியை 04 மீற்றர் உயரமான சுனாமி பேரலை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த நிலநடுக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தபோதிலும், இந்தியப் பெருங்கடல் படுகையில் உள்ள நாடுகளுக்கு அல்லது அதைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
