நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
நாடளாவிய ரீதியிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் இன்று(28) யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றும்(28) நாளையும்(29) இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய இன்று(28) காலை 11.00 மணியளவில், யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் நாளை(29) கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |