அம்பாறையில் சவப் பெட்டி தூக்கி மக்கள் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Ampara Sri Lanka SL Protest
By Shadhu Shanker Oct 09, 2024 11:29 AM GMT
Report

பெரிய நீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டமான இன்று(9) கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவனையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டம் பாடசாலைமாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.

களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை. சிறிய கிராமமான இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இது எங்கள் சமூகத்தை சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

அம்பாறையில் சவப் பெட்டி தூக்கி மக்கள் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Non Violent Protest At Liquor Store

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரித்தான உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக இது அம்பாறை மாவட்டத்தில் இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த பிரதேசத்திற் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் வருகை தந்த நிலையில் குறித்த மதுபான சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.

பின்னர் குறித்த மதுபான சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் சதோச மனித புதைகுழி அகழ்வு பணி: ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

மன்னார் சதோச மனித புதைகுழி அகழ்வு பணி: ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி நகுலேஸ் வேட்புமனுவில் ஒப்பம்

சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி நகுலேஸ் வேட்புமனுவில் ஒப்பம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016