ஈழ தமிழர்களை கண்டுகொள்ளாத தமிழ் தலைமைகள்..! (காணொளி)
வடக்கு - கிழக்கில் இன்று தமிழ் மக்கள் அகதிகளாக தான் இருக்கின்றார்கள் என மனித உரிமை தளத்தில் மனித உரிமை செயற்பாட்டாளராக இன்று வரைக்கும் இயங்கிக் கொண்டிருக்கிற சன்மாஸ்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தாயகத்தில் இருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா தொடக்கம் யாரும் தமிழகத்து அகதிகளுக்கா எந்தவொரு அறிக்கையும் வெளிவிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்கில் கூட இன்று தமிழ் மக்கள் அகதிகளாக தான் இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர், கேப்பாபிலவு இன்னமும் மீள் குடியேற்றம் முழுமையாக அனுமதிப்படவில்லையென்றும், சம்பூர் மக்கள் அகதிகளாக திருகோணமலையில் இருக்கின்றார்கள் என்றும், யாழில் தையிட்டி, பலாலி போன்ற எல்லை கிராமத்தில் மக்கள் இன்னமும் அகதிகளாவே இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதேபோல இந்தியாவின் தமிழகத்தில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் அகதிகளாக இருப்பதாகவும் ஆனால் தமிழ் தலைமைகள் உட்பட யாரும் கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்தார்
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 21 மணி நேரம் முன்