மீண்டும் மிரட்டும் வடகொரியா : சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்
வட கொரியா(north korea) அதன் கிழக்கு கடற்கரையில் பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியா(south korea) மற்றும் ஜப்பான்(japan) நாடுகள் தெரிவித்துள்ளன.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்(kim jong un), தனது அணுசக்தியை அதன் எதிரிகளுடன் போருக்கு முழுமையாக தயார்படுத்துவதாக உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு, வியாழன்(இன்று) (22:10 GMT, புதன்கிழமை) காலை 7:10 மணிக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்திய தென்கொரியா
வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலில் விழுவதற்கு முன்பு 360 கிமீ (220 மைல்) பறந்து சென்றதைக் கண்டறிந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் கூறினார்.
"வடகொரியாவின் ஏவுகணை ஏவுதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், இது கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக அச்சுறுத்தும் தெளிவான ஆத்திரமூட்டல் ஆகும்" என்று தென்கொரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பை நிறைய தமிழர்களின் நகைகளுடன் வந்த சிறிலங்கா இராணுவ வீரன்! ஜுலை 83இல் திருநெல்வேலியில் நடந்தது என்ன?
இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள்
தென் கொரியா, ஏவுகணைகளின் எண்ணிக்கையை விவரிக்கவில்லை, ஆனால் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறியது.
இந்த ஏவுகணை ஏவதல்களை அடுத்து கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |