அமெரிக்காவிற்கு பேரதிர்ச்சி :அணு ஆயுத கப்பலை உருவாக்கியது வடகொரியா
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா(north korea) அணு ஆயுத கப்பலை கட்டி முடித்திருப்பது அமெரிக்கா (us)உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், கடலில் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருவதால், வடகொரியா மீது சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
நீர்மூழ்கி கப்பல் முன் போஸ் கொடுக்கும் வடகொரிய ஜனாதிபதி
அதை மீறியும் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை செய்து வருகிறது. இந்நிலையில்தான் தற்போது வெற்றிகரமாக கட்டி முடித்துள்ள அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலின் முன்னர் நின்று ஜனாதிபதி கிம் ஜாங் உன் போஸ் கொடுக்கும் போட்டோவை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 7 ஆயிரம் தொன் எடை கொண்டது என்றும், சுமார் 10 ஏவுகணைகளையும் சுமந்து செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது எனவும் கூறப்படுகிறது.
வடகொரியாவின் கடல் ஆதிக்கம் அதிகரிக்கும்
தென்கொரிய தீபகற்ப கடல் பகுதியின் ஆதிக்கம் தொடர்பாக வடகொரியா, தென்கொரியா இடையே தொடர் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த நீர்மூழ்கி கப்பலால் வடகொரியாவின் கடல் ஆதிக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்