மீள்குடியேற காணிகள் வழங்கப்பட்ட வலி வடக்கு பலாலி மக்களின் அவல நிலை!

Tamils Sri Lankan Peoples SL Protest Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 14, 2023 02:16 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்து பல்வேறு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.

குறிப்பாக சின்னவளை,பொலிகண்டி, நிலவன்,கே.கே.எஸ்.மற்றும் ஆனைப்பந்தி ஆகிய ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். குறித்த முகாம்களில் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியேற காணிகள் வழங்கப்பட்ட வலி வடக்கு பலாலி மக்களின் அவல நிலை! | North Palali People Status

நாமலுக்கு எதிரான முறைப்பாடு விசாரணை ஒத்திவைப்பு!

நாமலுக்கு எதிரான முறைப்பாடு விசாரணை ஒத்திவைப்பு!

அந்த மக்கள் தொடர்ந்தும் மனிதநேய அமைப்புக்களின் உதவியுடன் தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுத்து வந்த நிலையில் சுமார் 33 வருடங்களின் பிற்பாடு பலாலி வடக்கு (J/254)கிராம அலுவலர் பிரிவில் மேய்ச்சல் தரைக் கென ஒதுக்கப்பட்ட அரச காணியில் அவர்களுக்கு என காணி அளவீடு செய்யப்பட்டு,மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மக்கள் ஆதங்கம் 

எனினும் அந்த மக்களின் சொந்த பூர்வீக காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அந்த மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளதோடு அக்காணிகள் படையினர் வசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கவனமாக இருங்கள்! காவல்துறையின் விசேட அறிவித்தல்

கவனமாக இருங்கள்! காவல்துறையின் விசேட அறிவித்தல்

சுமார் 33 வருடங்கள் முகாம்களில் இருந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்த தாங்கள் முகாம்களில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்காணிகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

5 முகாம்களை சேர்ந்த 49 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் 45 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.ஏனைய 4 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற காணிகள் வழங்கப்பட்ட வலி வடக்கு பலாலி மக்களின் அவல நிலை! | North Palali People Status

45 குடும்பங்களுக்கும் 13 1/2 ஏக்கப் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் இந்து கோவிலுக்கு 10 பரப்பு காணியும்,பாடசாலைக்கு என 2 ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு ஒரு குடும்பத்திற்கு தலா 2 பரப்பளவு காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தின் உதவியுடனும் ஒத்துழைப்போடும் தாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டங்களின் பலனாகவே தமக்கு இக்காணி கிடைத்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

மீள் குடியேற்றம்

தற்போது தமது மீள் குடியேற்றத்துக்கு என வழங்கப்பட்டுள்ள குறித்த காணியானது மேய்ச்சல் தரைக் கூறிய காணியாக உள்ளது.

குறித்த காணியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்க கூடிய நிலை காணப்படுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற காணிகள் வழங்கப்பட்ட வலி வடக்கு பலாலி மக்களின் அவல நிலை! | North Palali People Status

இக்காணியானது மக்கள் வசிப்பதற்கு உகந்தது இல்லை எனவும்,இந்த காணியில் தாங்கள் இதற்கு முன்னர் வசிக்கவில்லை என்றும் மக்கள் வசிக்காத காணியை யே தமக்கு வழங்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த காணியில் மக்கள் வசிப்பதாக இருந்தால் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குறித்த காணிகளுக்கு சுற்று வேலி அமைத்தல் வேண்டும், தற்காலிக கொட்டகைகள் அமைக்க வேண்டும், குடிநீர் வசதி, மலசல கூட வசதி மற்றும் மின்சார வசதிகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் நடந்த கொலை! பதற வைக்கும் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் நடந்த கொலை! பதற வைக்கும் வாக்குமூலம்

அரச சார்பற்ற அமைப்பு

குறித்த மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களினால் உடனடியாக குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும்,அதற்கான உதவிகளை அரசாங்கத்திடம் இருந்தும் அரச சார்பற்ற அமைப்புகளிடம் இருந்தும் எதிர்பார்த்துள்ளனர்.

எனினும் எதிர் காலத்தில் தமது பூர்வீக காணிகளையே மீட்டெடுப்பதே தமது இலக்காக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் எங்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்ற தனியார் அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு,குறித்த அமைப்பின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் எங்களுக்கு எந்த நேரத்திலும் பக்க பலமாக செயல்படுவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிம்மின் அழைப்பை 'நன்றியுடன்' ஏற்றுக்கொண்ட புடின்

கிம்மின் அழைப்பை 'நன்றியுடன்' ஏற்றுக்கொண்ட புடின்


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025