வடக்கு ஆளுநர் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்
visit
mannar
northern governor
By Vanan
வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த வாரம் அரச அதிபரினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையினை ஆரம்பித்துள்ள அவர், இன்றைய தினம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன், திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்க பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டார்.

