வடக்கில் ஆட்சியமைக்க அரசின் தயவை நாடும் தமிழ் கட்சிகள் ...! இப்படி கூறுகிறார் அமைச்சர் பிமல்
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் வடக்கில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க(bimal ratnayake) இன்று(07) தெரிவித்தார்.
வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், அந்த கட்சிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கையில்,
வடக்கில் இரண்டாவது இடம்
வடக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி (NPP )இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சில கட்சிகள் வடக்கில் ஆட்சி அமைக்க தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
வடக்கில் தேசிய மக்கள் சக்தி( NPP) 150 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கட்சியின் கொள்கையின்படி முடிவு
"பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சிகள் கூட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. கட்சியின் கொள்கையின்படி நாங்கள் அதைப் பற்றி முடிவு செய்வோம்" என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை வடக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளபோதிலும் ஆட்சி அமைப்பதற்கு சக தமிழ் கட்சிகளின் ஆதரவு தேவை என கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
