அரசியல் தலையீடு ஏற்பட்டால் பதவியிலிருந்து விலகுவேன்! வடக்கு ஆளுநர் அதிரடி
தனது அரசியல் நடவடிக்கைகளின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலையீடு அல்லது ஏனைய அரசியல் இடையூறுகள் ஏற்படுமானால் பதவியிலிருந்து விலகுவதாக தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் களம் நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், வடமாகாணத்திலுள்ள மருத்துவத்துறையில் நிகழும் ஊழல் நடவடிக்கைகளுக்கு தற்போதைய புதிய அரசாங்கத்தின் கடுமையான சட்ட நடைமுறைகளினால் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ் மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் மீதான இலஞ்ச ஊழல் மற்றும் அசமந்த போக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள காணி பிரச்சினை மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |