வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டி - வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்
Sri Lankan Tamils
Vavuniya
Karate
Northern Province of Sri Lanka
By Nithusan
வடமாகாண ரீதியில் நடைபெற்ற பாடசாலை மட்டங்களுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியா 4 பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளது.
வடமாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்று போட்டியானது கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெற்றியீட்டிய இரு மாணவிகள்

இங்கு நடைபெற்ற குறித்த போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தை சேர்ந்த இரு மாணவிகள் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று வவு /இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைக்கும், தனது கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வாறு வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கான பொறுப்பாசிரியர்களாக ஜே.டி.ரெஜினோட் மற்றும் ஞா.ஞானகீதன் ஆகிய இருவரும் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி