அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம்

Donald Trump Volodymyr Zelenskyy Russo-Ukrainian War World
By Dilakshan Mar 02, 2025 12:58 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

நோர்வேயின் (Norway) எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப (Donald Trump) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இடையே நடந்த சர்ச்சைக்குரிய சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமெரிக்க இராணுவத்திற்கு சுமார் 3,000,000 லிட்டர் எரிபொருளை வழங்கியுள்ள ஹால்ட்பேக் பங்கர்ஸ் என்ற நிறுவனம், முகப்புத்தகத்தில் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

அமெரிக்கப் படைகளுக்கான எரிபொருள்

அதன்போது, "தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியும் அவரது துணை ஜனாதிபதியும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பிய மிகப்பெரிய மோசமான நிகழ்ச்சியை இன்று நாங்கள் கண்டோம்," என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம் | Norway Firm Stops Fuel Supply To Us

அத்தோடு, "அமெரிக்கா முதுகில் குத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்திய போதிலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டதற்கும் அமைதியாக இருந்தமைக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கு மிகப்பெரிய பாராட்டு” என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, “நோர்வேயில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கும், நோர்வே துறைமுகங்களை நாடும் அவர்களின் கப்பல்களுக்கும் எரிபொருள் வழங்குவதை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்ய - உக்ரைன் போர்

இதேவேளை, ஹால்ட்பேக் பங்கர்ஸின் உரிமையாளர் கன்னர் கிரான், நோர்வே விற்பனை நிலையமான கிஸ்டென்ஸுக்கு அளித்த பேட்டியில் இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம் | Norway Firm Stops Fuel Supply To Us

அத்துடன், பெப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து, நிறுவனம் ஏற்கனவே ரஷ்ய நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளை நிறுத்தியதோடு, அதன் விளைவாக கணிசமான வருவாய் இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கா உக்ரேனியர்களிடம் அவர்களின் நடத்தையின் அடிப்படையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹால்ட்பேக் பங்கர்ஸின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை : தைவான் அரசின் அதிரடி அறிவிப்பு

சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை : தைவான் அரசின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016