ரணிலின் நெற்றிக்கு நேரே சாகர காரியவசம் கூறிய விடயம்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்க மாட்டாது என ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி பெஜெட் வீதியிலுள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே செயலாளர் நாயகம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அதிபரின் அழைப்பின் பேரில்
அதிபரின் அழைப்பின் பேரில், சிறி லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மேலதிகமாக, அக்கட்சியிலிருந்து பிரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அமைச்சர் திரான் அலஸ் தலைமையிலான கட்சியின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நெற்றிக்கு நேரே
அச் சந்திப்பில் எதிர்வரும் அதிபர் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என அதிபரிடம் வினவப்பட்டதாக தெரிவித்த சாகர காரியவசம், மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட வேண்டுமாயின் அது தொடர்பில் சர்வகட்சி மாநாட்டை அழைக்காமல் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் தனியாக கலந்துரையாடப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |